Wednesday, March 21, 2012

ஒரு ரூபாயின் பயணம்

       கொளுத்தும் வெயில் நேரம்... வண்டிகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக சேர்ந்து பச்சை நிற விளக்குக்காக காத்திருந்தது. ட்ராபிக் போர்டு வினாடிகளை கவுண்டவுனாக எண்ணிக்கொண்டிருந்தது. அழுத பிள்ளை தாயை பார்த்தது போல பிச்சைக்காரர்கள் தங்கள் தட்டுகளுடன் ஒவ்வொரு வண்டியின் முன் சென்று பிச்சை கேட்கத் தொடங்கினர். அதில் ஒரு கால் கையை இழந்த 30 வயது மதிக்கத் தக்க பெண் தானும் தன தட்டுடன் நீல நிற டிவிஎஸ் 50 நெருங்கினால். 55 வயதனாலும் 25 போல கம்பீரத்துடன் அமர்ந்து கொண்டு தானும் தன பங்கிற்கு ட்ராபிக் போர்டு எண்களை பின்னோக்கி எண்ணிக்கொண்டிருந்தார் வண்டிக்கு சொந்தக்காரர். அந்த பெண் அவரிடம் சென்று தட்டை நீட்ட உடனே கிடைத்தது சில்லறை அல்ல, "ச்சீ போ அந்த பக்கம் " என்ற அவரது திட்டுகள் தான். அவரது செல்ல நாயை கூட அப்படி அவர் திட்டியதில்லை.  பழக்கப்பட்டது போல் அந்த பெண்ணும் அங்கிருந்து நகராமல் "ஐயா ஒரு ரூபாயாவது போதுமாக சாமி" என்று குரலைக் கூட்டினால். "இப்ப பொரிய இல்லையா" என்று அவர் கையை ஒங்க, இருந்த இடம் தெரியாமல் மறைந்தாள் அந்த பெண். "இதுங்கள மொதல்ல ஒழிக்கணும்" என்று பக்கத்து வண்டிக்கரரிடம் புலம்பியபடியே தன வண்டியை கொஞ்சம் முன்னே நகர்த்தினார்
          5......4.....3......2.....1..... சிவப்பு மறைந்து பச்சை விளக்கு ஏறித் தொடங்கியவுடன் தனது டிவிஎஸ் 50ஐ ரேஸ் செய்தார். வண்டி இரண்டு அடி தூரத்தை கூட கடந்திருக்காது. அதற்குள் பலத்த சத்தத்துடன் பின் டயர் வெடித்து பஞ்சரானது. "சனியன் இது வேறயா. இன்னிக்கு 50 ரூபா மிச்சமாகுதேன்னு நெனைச்சேன். எழவு போச்சா" என்றபடி ரிப்பேர் கடைக்காக தெருவை முழுவதுமாக நோட்டம் விட்டார்.
          சொல்லி வைத்தது போல் வலக்கை பக்கம் ஒரு கடை இருந்தது. அனால் கடை என்று சொல்லுமளவுக்கு அங்கு ஒன்றும் இல்லை. உடைந்து போன தொட்டியில் கொஞ்சம் அழுக்கு தண்ணீர், நிழலுக்கு ஒரு கூரை, கூரையில் நான்கைந்து டயர்கள், தரையில் இரண்டு மர சாமான்கள். மெக்கானிக் திரையில் பட்டம் பெற்ற உணர்வோடு பஜாஜின் முன்பக்கத்தில் ஏதோ முடுக்கிக்கொண்டிருந்தார் கடை முதலாளி.
"தம்பி! பின்னாடி பஞ்ச்சர் போடுப்பா" என்று வண்டியை ஓர் ஓரமாக நிறுத்தினார் வண்டிக்காரர். "டேய் ஆள் வந்திருக்காங்க பாரு.." என்று முதலாளி துறல் கொடுக்க உள்ளிருந்து ஓடிவந்தான் ஒரு சிறுவன். இரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டு பஞ்ச்சர் போட்டிக்கொண்டிருக்கும் பையன். கையில் இரண்டு இரும்பு சாமானைக் கொண்டு வண்டியில் பின்புற டயரைக் கழட்டி உள்ளிருந்து டுயுபை எடுத்து அருகிலிருந்த தொட்டி நீரில் முக்கினான். ஓட்டை விழுந்த டுயுபின் ஒரு முனை தண்ணீரை கொப்பளிக்கச் செய்தது. ஓட்டையை அடையாளம் கண்டு கொண்டு, ஏதோ பசையையும் ரப்பர் துண்டையும் கொண்டு ஓட்டையை அடைத்து மீண்டும் தண்ணீரில் முக்கினான். இப்போது நீரில் எந்த சலனமும் இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு, டயரை வண்டியின் பின்புறம் முடிக்கினான். "எவ்ளோ தம்பி" என்று வண்டிக்காரர் கேட்டுமுடிப்பதற்குள் "20௦ சார்" என்று பதில் கொடுத்தார் கடை முதலாளி. "ஏம்பா பத்த இருபது ஆக்கிட்டீங்களா. இந்தா பதினஞ்சு" என்று நீட்டினார் வண்டிக்காரர். அவரும் அலட்டாமல் வாங்கிக்கொண்டார். "எவன் முகத்துல முழிச்சேனோ! சனியன்" என்ற தோரணையில் வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து மறைந்தார், வண்டிக்காரர்.